சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பு
ஊட்டி; காஷ்மீர் சம்பவத்தை அடுத்து சுற்றுலா தலங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணியர், 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பிற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் மத்தியில் பீதியை ஏற் படுத்தியது. இந்நிலையில், ஊட்டி, குன்னுார், கூடலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில்,'காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக நீலகிரி சுற்றுலா தலங்களில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.