உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான 'பல்ஸ் போலியோ' சொட்டுமருந்து முகாம், மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனையில் நடந்தது. இம்முகாமை எம்.பி. ஸ்ரீகண்டன் தொடங்கி வைத்தார். மண்ணார்க்காடு நகராட்சித்தலைவர் சஜ்னா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட மருத்துவ அலுவலர் (சுகாதாரம்) டாக்டர் பிந்து தாமஸ் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் அனிதா இத்திட்டம் குறித்து விளக்கினார். மாவட்ட ஊராட்சி சுகாதாரம் மற்றும் கல்வி நிலைக்குழுத்தலைவர் ஷீலா தேவி, மண்ணார்க்காடு ஊராட்சி ஒன்றியத்தலைவர் நீது சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ