உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் சாலையோரம் குழி; சீரமைத்தால் ஆபத்தில்லை

கூடலுார் சாலையோரம் குழி; சீரமைத்தால் ஆபத்தில்லை

கூடலுார்; 'கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும், குடியிருப்பு சாலையோரம், ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் செவிலிப்பேட்டை அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை இருந்து, கண் ஹாஸ்பிடல் இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை குடியிருப்பு வாசிகள் மட்டுமின்றி, இங்குள்ள ஊராட்சி ஒன்றிய குடியிருப்புகளில் வசித்து வரும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையோரம் ஏற்பட்டுள்ள குழியால் வாகனங்கள் சென்று வரவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. மழை காலங்களில் சாலையில் வழிந்தோடும், மழைநீரால் இப்பகுதியில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்படுத்தி வருவதால் குழி தொடர்ந்து பெரிதாகி வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை