உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜனாதிபதி வருகை எதிரொலி; அவசர கதியில் சாலை சீரமைப்பு

ஜனாதிபதி வருகை எதிரொலி; அவசர கதியில் சாலை சீரமைப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.அதன்படி, 27ம் தேதி கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். 28ம் தேதி சாலை மார்க்கமாக, குன்னுார் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில், கலெக்டர் லட்சுமிபவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஜனாதிபதி தரையிறங்கும் தீட்டக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும், ஜனாதிபதி சாலை மார்க்கமாக செல்லும், தாவரவியல் பூங்கா சாலை உட்பட சில பகுதிகளில் நகராட்சி, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் அவசர கதியில் 'பேட்ச்' பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூறுகையில்,'ஜனாதிபதி வருகையின் போது நடக்கும் சாலை பணிகளையாவது தரமாக மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை