பாலக்காடு கலெக்டராக பிரியங்கா பொறுப்பேற்பு
பாலக்காடு: பாலக்காடு மாவட்ட கலெக்டராக பிரியங்கா பொறுப்பேற்றார்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா, விடுமுறையில் சென்றுள்ள நிலையில், மாவட்ட புதிய கலெக்டராக பிரியங்காவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரியங்கா நேற்று கலெக்டராக பொறுப்பேற்றார்.கர்நாடகா மாநிலம், தும்குரு மாவட்டத்தை சேர்ந்த இவர், 2017ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டம், பொது மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர், திருவனந்தபுரத்தில் உதவி கலெக்டர், கோழிக்கோடு சப்-கலெக்டர், சமூக நலத் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பாலக்காடு மாவட்டத்தை, வேளாண்மை, தொழில், சுற்றுலா துறைகளில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவேன், என, தெரிவித்தார்.