உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லூரியில் கலை திருவிழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

அரசு கல்லூரியில் கலை திருவிழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

ஊட்டி: -ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடந்த கலைத் திருவிழாவில், சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிறைவு விழா நடந்தது. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், 'கல்லூரி கலை திருவிழா போட்டிகள் 2025' என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன. கல்லூரி கலை திருவிழா குழு உறுப்பினர் கனகாம்பாள் வரவேற்றார். கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஷோபனா விழா அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் பிராங்கிளின் சி ஜோஸ் தலைமை வகித்து பேசினார். கல்லூரி நுண் கலை மன்ற துணை ஒருங்கிணைப்பாளர் நீல ஓம் முருகன் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லூரி கலை திருவிழா போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், கலைத் திருவிழா குறித்து காணொளி திரையிடப்பட்டது. நுண்கலை மன்ற மாணவியர் தஸ்லிமா நஸ்ரின் மற்றும் தபித்தா பிரான்சிஸ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். நுண்கலை மன்ற மாணவர் சுதிர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, கலை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை