குந்தா மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
மஞ்சூர் : குந்தா மேல்முகம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். பொறுப்பாளர் ரமேஷ் , செயலாளர் மகேந்திர குமார் , ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயலாளர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மண்டல கன்வீனர் கலைச்செல்வி உட்பட பலர், கோரிக்கை குறித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 'அலுவலகத்தில் பணியாற்றும் நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.