சிறு தேயிலை விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
பந்தலுார்; பந்தலுார் அருகே சோலாடி கிராமத்தில், தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிலரங்கு மற்றும் பயிற்சி திட்டம் நடந்தது. தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி வருண் தலைமை வகித்து தேயிலை வாரிய திட்டங்கள் மற்றும் விவசாயிகள் அதன் மூலம் பயன்பெறும் வழிமுறைகள், தரமான தேயிலை அறுவடை செய்வது குறித்து விளக்கம் அளித்தார். மேலும், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர் திப்ய ஜோதி தத்தா விளக்கம் அளித்தார். ஆலோசகர் மணிகண்டன் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் தரமான தேயிலை கொள்முதல் குறித்தும் பேசினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.