ரோஜா கண்காட்சிக்கு 2.5 லட்சம் மலர் நாற்றுகள் புரூனிங் பணி துவக்கம்
ஊட்டி; ஊட்டியில் மே மாதம் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கு, 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு மே மாதத்தில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. இப் பூங்காவில் , 4,201 ரோஜா ரகங்களில், 32, 000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக 100 ரோஜா ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நடப்பாண்டு கோடை சீசனுக்காக, ரோஜா செடிகளில் புரூனிங் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று, இப்பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,'' நடப்பாண்டு, 20 வது ரோஜா கண்காட்சி மே மாதம் நடக்கிறது. ரோஜா கண்காட்சிக்காக, 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார். தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் முகமது பைசல் உட்பட பலர் பங்கேற்றனர்.