மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலையோரம் சீரமைத்தால் பயன்
14-Oct-2024
கூடலுார் : கூடலுாஒர் செம்பாலா அருகே, சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கூடலுார் - கோழிக்கோடு சாலை, உள்ளூர் மற்றும் கேரளமாநிலம் வயநாடு, மலப்புரம், திருச்சூர் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளின் வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரையிலான சாலை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரையிலான, 2 கி.மீ., சாலை சீரமைக்க வில்லை. தற்போது பெய்து வரும் மழையில் சாலை மேலும் சேதமடைந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை சீரமைக்க ஓட்டுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், செம்பாலா பகுதியில், சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க, இரு நாட்களுக்கு முன் பாறை பொடி கலந்த ஜல்லிகற்கள் எடுத்து வரப்பட்டு சாலையோரம் கொட்டப்பட்டது.இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சேதம் அடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிரந்தரமாக சீரமைக்க வலியுறுத்தினர். இதனால், ஊழியர்கள் தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த இப்பகுதி சாலை ஏற்கனவே, பலமுறை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே, இப்பகுதியை, நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
14-Oct-2024