தள்ளுமாடல் வண்டியான குப்பை வாகனம்: பணியாளர்களுக்கு சிரமம்
குன்னுார்; குன்னுார் நகராட்சியில், பராமரிப்பு இல்லாத, குப்பை ஏற்றி செல்லும் வாகனங்களை, துாய்மை பணியாளர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவலம் நீடிக்கிறது.குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மையத்திற்கு, 12 வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. நகராட்சி சார்பில் உரிய பராமரிப்பு செய்யாமல் உள்ள இந்த வாகனங்கள் பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைகிறது. இந்நிலையில், குன்னுார் மார்க்கெட் அருகே ஸ்டார்ட் ஆகாமல் நின்ற, குப்பை வாகனத்தை துாய்மை பணியாளர்கள் தள்ளி இயக்க வைத்தனர். நகராட்சியில் புதுப்பிக்காமல் உள்ள வாகனங்களை இயக்குவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகனங்களை புதுப்பித்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.