உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வருங்காலம் ஆளப்போகும் குவாண்டம் அறிவியல் : கருத்தரங்கில் விளக்கம்

வருங்காலம் ஆளப்போகும் குவாண்டம் அறிவியல் : கருத்தரங்கில் விளக்கம்

கோத்தகிரி: - குவாண்டம் அறிவியல் நுாறாவது ஆண்டை முன்னிட்டு, துானேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது: விஞ்ஞானி நியூட்டன், 17ம் நூற்றாண்டில் பூமியில் மட்டுமல்ல சூரிய குடும்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கேலக்ஸிகள் இயங்கும் விதத்தை கணித சமன்பாடுகள் வாயிலாக நிறுவினார். 300 ஆண்டுகள் அவருடைய கண்டுபிடிப்பு அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதில் சில மாற்றம் ஏற்பட்டது. 1925ல், விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஒரு அணுவுக்கு உள்ளே இருக்கும் துகள்கள், நியூட்டன் விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும், அணு துகளுக்குள் குழப்பம் இருப்பதாகவும் கூறினார். பின், வந்த விஞ்ஞானிகள், அதை கண்டறிந்து, 'குவாண்டம் அறிவியல்' என பெயரிட்டனர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து துகள்களும் இயங்கிக் கொண்டே இருப்பதாகவும், ஒவ்வொரு துகளிலும் ஆற்றல் நிறைந்திருக்கிறது எனவும் கண்டறிந்தனர். வருங்காலத்தை ஆளப்போகும் இந்த குவாண்டம் அறிவியலை, மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு,அவர் பேசினார். மேற்கு நாடு சீமை தலைவர் மணிவண்ணன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் குமார், அசோக் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, 'துளிர்' என்ற அறிவியல் புத்தகம் வழங்கப்பட்டது. கோளரங்கம் நிகழ்ச்சி இடம்பெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ