உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வினாடி - வினா போட்டி

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வினாடி - வினா போட்டி

கோத்தகிரி ; கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். அதில், சிறார் நீதி, போக்சோ சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்பு ஆகியவை சார்ந்து, 40 வினாக்கள் கேட்கப்பட்டது. குவிஸ் மாஸ்டர்களாக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர் மேகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். போட்டி, ஐந்து குழுக்களாக நடந்தது.வினாடி, வினா போட்டியில், 100க்கு, 90 மதிப்பெண் பெற்ற நெய்தல் அணியை சேர்ந்த, தனுஷியா, கிறிஸ்டோபர் ஆகியோர் முதலிடத்தை வென்றனர்.மருதம் அணியை சார்ந்த அஸ்வின்; பாலை அணியை சார்ந்த பிரியதர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடத்தை பெற்றனர். குறிஞ்சி அணியை சேர்ந்த பர்னிக்கா, இஷானி ஆகியோர் மூன்றாம் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியை கமலா, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை