உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொலிவு பெறும் ரயில் நிலையம்; போட்டோ எடுக்க பயணிகள் ஆர்வம்

பொலிவு பெறும் ரயில் நிலையம்; போட்டோ எடுக்க பயணிகள் ஆர்வம்

குன்னுார்; குன்னுார் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்ட போதும், சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்வதுடன், புகைப்படம் மற்றும் 'வீடியோ' எடுத்து பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குன்னுார் மலை ரயில் நிலையம், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், ரயில் பெட்டிகள், இன்ஜின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ