உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்டல அளவிலான தடகள போட்டி; பல்வேறு பள்ளிகள் பங்கேற்பு

மண்டல அளவிலான தடகள போட்டி; பல்வேறு பள்ளிகள் பங்கேற்பு

ஊட்டி; ஊட்டியில் நடந்த மண்டல அளவிலான தடகள போட்டியில், ஹில்போர்ட் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், கோத்தகிரி மண்டல அளவிலான தடகள போட்டி நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியை, கோத்தகிரி ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி நடத்தியது. அதில், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அதில், கோத்தகிரி ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி, அதிக புள்ளிகளுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திராணி, ஹில்போர்ட் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி விளையாட்டு இயக்குனர் ராமன்ரகுநாத் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை