மேலும் செய்திகள்
ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்
14-Jun-2025
கூடலுார்; 'கூடலுாரில் உற்பத்தி செய்யப்படும் நேந்திரன் வாழை, குறுமிளகு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்,' என, வலியுறித்தியுள்ளனர்.கூடலுாரில் நீண்ட காலம் பயன் தரும், 'தேயிலை, காபி, பாக்கு; வாசனை பொருட்களான ஏலம், கிராம்பு, குறுமிளகு; குறுகிய கால பயன் தரும் நேந்திரன் வாழை, இஞ்சி, பாகற்காய், பஜ்ஜி மிளகாய், கத்தரிக்காய், பீன்ஸ்,' உள்ளிட்ட விவசாய விளைப் பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.இங்கு விளையும் பெரும்பாலான விவசாய பயிர்களை, கேரள மாநிலம் வயநாடு மார்க்கெட் நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதில்,எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது, நேந்திரன் வாழை அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 48 ரூபாய் வரை கிடைக்கிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிலும் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், வயநாடு மார்க்கெட்டில், விலை நிர்ணயப்படி கூடலுாரில் கிலோவுக்கு, 30 ரூபாய் வரை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில், நேந்திரன் வாழை கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இதற்கு தீர்வாக கூடலுாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.வியாபாரி மோகன் கூறுகையில், ''கொள்முதல் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூடலுாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். இதனால், கேரளா, கர்நாடகா வியாபாரிகள் எளிதாக விவசாய பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,''என்றார்.
14-Jun-2025