உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடும்ப சங்கமத்தில் சந்தித்து மகிழ்ந்த சொந்தங்கள்

குடும்ப சங்கமத்தில் சந்தித்து மகிழ்ந்த சொந்தங்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வென்ட்வொர்த் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற, தொழிலாளர்கள் இணைந்து, 'நியூ பேமிலி குரூப்' உருவாக்கி உள்ளனர். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சேரம்பாடி சுங்கம் தனியார் மண்டபத்தில் நடந்தது. ஓய்வு பெற்ற தொழிலாளி அனீபா வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன்,வனச்சரகர் அய்யனார் துவக்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் பாத்திமா தலைமை வகித்து பேசுகையில்,'' இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,'' என்றார். நிகழ்ச்சியில், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக வேலை செய்த தொழிலாளர் மற்றும் உறவுகள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேரி, பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், அணில் குமார் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை