நிழற்குடையை சூழ்ந்த புதர் செடிகள் அகற்றம்
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி மின் வாரிய அலுவலகம் அருகே, பயணிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நிழற்குடை, புதர்கள் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனடியாக புதர்களை அகற்றி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், நிழற்குடையை சூழ்ந்து காணப்பட்ட புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால், தற்போது பயணிகள் அச்சமின்றி நிழற்குடையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதே போன்று சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நிழற்குடைகளை பராமரித்தால் மக்கள் பயன்பெறுவர்.