உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் ரெப்கோ வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

கூடலுாரில் ரெப்கோ வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

கூடலுார்; ரெப்கோ வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு, 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கூடலுார், 'ரெப்கோ' வங்கியின் சார்பில், 56வது நிறுவன நாள் விழா வங்கியில் நடந்தது. துணை மேலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். வங்கியின் முதன்மை மேலாளர் ரங்கராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு, 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கூடலுார் கிளை சார்பாக வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. நிறுவன நாளை முன்னிட்டு சிறப்பு 'டெபாசிட்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 560 நாட்கள் காலக்கெடுவுக்கு மூத்த குடிமக்களுக்கு, 8.75 சதவீதமும் மற்றவர்களுக்கு, 8.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், குறைந்த வட்டியில் நகை கடன், வீட்டு அடமான கடன் வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.விழாவில், வங்கி ஊழியர்கள் ராஜன், உதயபாஸ்கர், கோகிலராஜன், வாசுகி, சவுந்தர்யா, வேளாங்கண்ணி, பிரபு ஹரிபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை