உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி, குன்னுாரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; பள்ளியில் பெற்றோர் குவிந்ததால் விடுமுறை

ஊட்டி, குன்னுாரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; பள்ளியில் பெற்றோர் குவிந்ததால் விடுமுறை

குன்னுார் : குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளிக்கு, இ-மெயிலில், இரண்டாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பெட்போர்டு அருகே ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில், 1,367 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு, 8ம் தேதி, இ--மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்துள்ளது.உடனடியாக விடுமுறை அறிவித்து, பெற்றோருக்கு தகவல் கொடுத்து, மாணவ, மாணவியர் வெளியே அனுப்பப்பட்டனர். வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இம்முறையும் எதுவும் கிடைக்கவில்லை.பெற்றோர் கூறுகையில், 'வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

ராணிப்பேட்டை, சென்னையிலும் மிரட்டல்

ராணிப்பேட்டை சிப்காட்டில், பெல் நிறுவன குடியிருப்பு பகுதியிலுள்ள, டி.ஏ.வி.,--- சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் வீரமுருகன் இ-மெயில் முகவரிக்கு, பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்று மிரட்டல் வந்துள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளிக்கு சென்று சோதனை நடத்தினர். நேற்று மாலை வரை நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அது வெறும் மிரட்டல் என தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், அஸ்விதா கருணாநிதி என்ற இ-மெயில் முகவரி மூலம் மிரட்டல் வந்தது தெரிந்தது.ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று காலை, பள்ளியின் பிரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வந்தது.அதேபோல், கோட்டூர்புரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும், நேற்று காலை அனுஷா தயாநிதி பெயரில் இ - மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் பள்ளி முழுதும் சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவித வெடிப் பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை