மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்: வாகனங்களுக்கு கிருமி நாசினி
1 minutes ago
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
1 minutes ago
பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., ஸ்மிதேஷ் பதவியேற்பு
3 minutes ago
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பூங்காவை சுற்றி பார்க்க ஏதுவாக, பேட்டரி கார் இயக்கப்படுகிறது. இந்த காரில் ஒருவருக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.'இந்நிலையில், கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில், பேட்டரி காரில் பயணிக்கும் சிலருக்கு கட்டணம் வசூலித்து, டிக்கெட் வழங்குவதில்லை,' என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், 'பூங்கா நுழைவு கட்டணம் வாங்கும் டிக்கெட் கண்டரில், பேட்டரி காருக்கும் டிக்கெட் வழங்கும் முறையை தோட்டக்கலை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிபிதா கூறுகையில்,''பூங்காவில் டிரைவர் உட்பட, 10 பேர் பயணிக்கும் பேட்டரி காரில் கட்டணம் வசூலிக்க இரண்டு மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் கொடுத்தவுடன் உடனடியாக, பில் கொடுக்கப்படுகிறது. தவறு நடப்பதாக தெரியவில்லை. இருப்பினும், ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
1 minutes ago
1 minutes ago
3 minutes ago