உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை காஸ் சிலிண்டர் குழாய் பாதிப்பு

தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை காஸ் சிலிண்டர் குழாய் பாதிப்பு

குன்னுார்; குன்னுாரில் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி, காஸ் சிலிண்டர் குழாயை கடித்து குதறியுள்ளது.குன்னுார் 'ஐபீல்டு' பகுதியில், சாக்லேட் தொழிற்சாலை மற்றும் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு,12:30 மணி அளவில் வந்த கரடி, கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து பொருட்களை சேதம் செய்தது.அங்கிருந்த வெள்ளை சாக்லேட் மற்றும் பாதாம் எண்ணெய் உட்பட எண்ணெய் வகைகளை உட்கொண்டுள்ளது. மேலும், அடுப்புடன் இணைப்பில் இருந்த காஸ் சிலிண்டர் குழாயை கடித்து குதறி உள்ளது. எனினும், சிலிண்டர் ரெகுலேட்டர் அணைக்கப்பட்டு இருந்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இதே போல, காட்டேரி முத்துமாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை வந்த கரடி அங்கிருந்து ரயில் பாதை வழியாக சென்றது. 'இந்த பகுதிகளில், கூண்டுகள் வைத்து, கரடியை பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''ரெகுலேட்டர் இணைப்பு திறந்து வைத்திருந்தால், கரடியின் இது போன்ற செயலால், காஸ் கசிவு ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில், சிலிண்டர் ரெகுலேட்டர் இணைப்பை கட்டாயம் அணைத்து வைப்பது அவசியம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை