உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு பணி ஒத்திகை

கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு பணி ஒத்திகை

பாலக்காடு: அவசர காலங்களில் மக்களை பாதுகாப்பாக மீட்பது மற்றும் அரசு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பாலக்காடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. பாலக்காடு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் ‘சிவில் டிபென்ஸ்’ ஆகியவை இணைந்து இப்பயிற்சியை நடத்தின. மூன்று தளங்களை கொண்ட கட்டடத்தில், தீ விபத்து அல்லது பிற அவசர சூழல்கள் ஏற்பட்டால், ஊழியர்களையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக, ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன், ‘சிவில் டிபென்ஸ்’ தன்னார்வலர்களும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கட்டடத்தின் மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்பது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் முதலுதவி அளிப்பது குறித்து தத்ரூபமாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் சுதீர், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி, தீ அணைக்கும் முறையை நேரடியாக செய்து காட்டினார். அவசர காலங்களில் தீயணைப்பு கருவிகளை கையாளும் விதம் மற்றும் ஆரம்ப கட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை