மேலும் செய்திகள்
குடியிருப்பில் மலைப்பாம்பு
19-Dec-2024
குன்னுார்; குன்னுார் ஆற்றில் காயங்களுடன் வெளியேற முடியாமல், 2 நாட்கள் தவித்த நாய் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆற்றில் புதர் சூழ்ந்த இடத்தில் காயங்களுடன் இரு நாட்களாக நாய் தவித்து வந்துள்ளது. இது தொடர்பாக, நீலகிரி விலங்குகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர் பிரேமா தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினரையும் நாய் கடிக்க முற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு நாயை மீட்டு, நீலகிரி விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். கால்நடை டாக்டர் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
19-Dec-2024