உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானையால் சேதமடைந்த குடியிருப்பு

காட்டு யானையால் சேதமடைந்த குடியிருப்பு

பந்தலுார்; பந்தலுார் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார். தேவதாஸ் கூறுகையில், 'தாழ்வான பகுதியில் உள்ள எங்கள் கிராமத்தில் நாள்தோறும் யானைகள் முகாமிட்டு அச்சுறுத்தி வருகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை