உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாம்பே கேசில் சாலை சேதம்; அடிக்கடி வாகன விபத்து

பாம்பே கேசில் சாலை சேதம்; அடிக்கடி வாகன விபத்து

ஊட்டி; 'ஊட்டி பாம்பே கேசில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி பாம்பே கேசில் சாலை வழியாக, ரோஜா பூங்கா, நெடுஞ்சாலைத்துறை, தனியார் கல்லுாரிக்கு செல்ல வேண்டும். மேலும் அப்பகுதியை சுற்றி ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா வாகனங்களும் இச்சாலையில் அதிகளவில் சென்று வருகிறது. முக்கியத்துவமான இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலையின் நிலை குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை