மேலும் செய்திகள்
கோவை சங்கனூர் ஓடைக்குள் விழுந்த வீடு
20-Jan-2025
குன்னுார்; குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம், கன்னிமாரியம்மன் கோவில் தெரு, ஆழ்வார்பேட்டை உட்பட ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தடுப்பு சுவர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.இந்நிலையில், நகராட்சி, 3வது வார்டில் பூட்டப்பட்ட கவுடர் தியேட்டர் பகுதி சாலை அருகே தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வெலிங்டனுக்கு செல்லும் சாலையில், வாகனங்கள் செல்லாமல் இருக்க, தடை விதித்து சாலையின் நடுவே கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'பழைய கவுடர் தியேட்டர் உட்பட இந்த பகுதிகள் ஆளும் கட்சியினர் வசம் சென்றுள்ளது. உள்ளூர் வாகனங்கள் செல்லாத பகுதியில் தடுப்பு சுவர், சாலை பணிகள் நடந்து வருகிறது. தடுப்பு சுவர் பணிக்கான தீர்மானத்தை மன்ற கூட்டத்தில் முன் வைக்காமல், நகராட்சி பொது நிதியில், 42 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 73.5 லட்சம் ரூபாய் செலவில் டி.டி.கே., சாலை அமைக்கும் பணியின் போது, இந்த சாலையை அமைக்கவும் நகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''டி.டி.கே., சாலை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழைய கவுடர் தியேட்டர் பகுதியில் அமைத்த தடுப்பு சுவர் மற்றும் சாலை பணி மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
20-Jan-2025