உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சோதனை சாவடி அருகே குளமாக மாறிய சாலை

சோதனை சாவடி அருகே குளமாக மாறிய சாலை

பந்தலுார்; பந்தலுார் அருகே, தமிழக- கேரளா எல்லை பகுதியாக நம்பியார்குன்னு அமைந்துள்ளது.இரு மாநில அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.சாலையின் ஒரு பகுதி கேரளா எல்லையிலும், மறு பகுதி தமிழக எல்லையிலும் அமைந்துள்ளது. இங்குள்ள தமிழக வனத்துறை சோதனை சாவடி மற்றும் போலீஸ் சோதனை சாவடி எதிரில் சாலை முழுமையாக சேதமடைந்து, குளமாக மாறி தண்ணீர் நிறைந்து உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் குழிகளில் சிக்கி, காவல் பணியில் ஈடுபடும் வனத்துறை மற்றும் போலீசார் உடைகள் மீது நீரை தெளித்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், வாகனங்களும் பாதிக்கப்படுகின்றன.மாநில எல்லை பகுதியில் சாலை முழுமையாக சேதமடைந்து குளமாக காட்சி தரும் நிலையில் இந்த வழியாக வந்து செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் புகார் கூறி செல்கின்றனர். இந்நிலையில், இதனை சீரமைக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இது குறித்து கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதால் சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !