உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர செடிகள் அகற்றம்: வாகன ஓட்டிகள் நிம்மதி

சாலையோர செடிகள் அகற்றம்: வாகன ஓட்டிகள் நிம்மதி

கூடலூர்: கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை உள்ளூர் வாகனங்கள், தமிழக, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், நடுவட்டம் முதல் சில்வர் கிளவுட் முனீஸ்வரன் கோவில் வரை, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறம் செடிகள் வளர்ந்தது. அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது. செடிகளை அகற்ற ஓட்டுனர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்பகுதியை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரம் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றும் பணியை நேற்று, துவங்கியுள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வளரும் செடிகளை அகற்றி, தொடர்ந்து பராமரித்தால் விபத்து அபாயத்தை தவிர்க்கலாம்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ