மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்
30-Sep-2025
பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலயத்தில் நடந்த தொடர் ஜெபமாலையில் உலக சமாதானத்திற்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தேவாலா பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில், தொடர் ஜெபமாலை நடந்தது. பங்குத்தந்தை வில்சன் மற்றும் நிதிஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற, தொடர் ஜெபமாலையில் உலக அமைதி, மத நல்லிணக்கம், உலக நாடுகள் இடையே நட்புணர்வை பெருக்குதல் போன்றவற்றிற்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும், அன்னை மரியாளின் வழியாக, இயேசுவிடம் இருந்து வரங்களை பெற்றுத் தரவும் பிரார்த்தனை நடந்தது. அத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல், உக்ரைன், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், காசா போன்ற நாடுகளில் நிலவி வரும் போர் தணிந்து உலக அமைதி வேண்டிய பங்கு மக்கள் தொடர் ஜெபமாலை செய்தனர். இதில், பங்கு மக்கள் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
30-Sep-2025