உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் மகளிர் குழுவினருக்கு ரூ.15 லட்சம் கடனுதவி

பந்தலுாரில் மகளிர் குழுவினருக்கு ரூ.15 லட்சம் கடனுதவி

பந்தலுார்: பந்தலுார், திருமுருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் நவீன் வரவேற்றார். தலைமை வகித்த மண்டல துணை பதிவாளர் தயாளன் பேசுகையில், ''கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், ஏதேனும் தவறுகள் செய்தால், உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்யும் உரிமை கூட்டுறவு சங்கத்துக்கு உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் கடனுதவி பெற்று, சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் காணவும், வங்கிகளில் பெரும் கடன்களை முறையாக செலுத்தி தொடர்ந்து கூடுதலாக, கடன்கள் பெற்று தொழிலை மேம்படுத்தி கொள்ள முன் வர வேண்டும்.விரைவில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அரசு மூலம் அடையாள அட்டை வழங்கும் நிலையில், கூட்டுறவு விற்பனை சங்கங்களில் சிறப்பு சலுகை வழங்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, மூன்று மகளிர் குழுக்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் வீதம், 15 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் அய்யனார், வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ், பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை செயலாட்சியர் அமர்நாத், வங்கி சார்பில் கிடைக்கும் பயன்களை குறித்து விளக்கி பேசினார்கள்.கூட்டுறவு சார் பதிவாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை