உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாற்றுகள் விற்பனை: விவசாயிகளுக்கு அழைப்பு

நாற்றுகள் விற்பனை: விவசாயிகளுக்கு அழைப்பு

கூடலுார்; கூடலுார் பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நாற்றுகளை பெற்று கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை பண்ணை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு, ஜாதிக்காய், பட்டை, பேஷன் புட்ஸ், அலங்கார செடிகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள் பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் நேரில் சென்று வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ