உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் டீசர்வ் ஏலத்தில் விற்பனை வீழ்ச்சி

குன்னுார் டீசர்வ் ஏலத்தில் விற்பனை வீழ்ச்சி

குன்னுார்: குன்னுார் 'டீசர்வ்' ஏலத்திலும் தேயிலை விற்பனை வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் உயர்ந்து வந்த நிலையில், தற்போது சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், குன்னுாரில் நடந்த, 42வது தேயிலை ஏலத்தில், 58.68 சதவீதம் மட்டுமே விற்றது. மொத்த வருமானமும் சரிந்தது. இதே போல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள் ஏலம் விடப்படும் டீசர்வ் மையத்திலும் சரிவை சந்தித்தது. கடந்த ஏலத்திலும், 44 சதவீதம் மட்டுமே விற்றது. தொடர்ந்து, 42வது ஏலத்தில், 1.59 லட்சம் கிலோ வந்ததில், 98 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 137.16 ரூபாய் என இருந்தது. இதேபோல, கோவை ஏல மையத்தில், 4.72 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 3.30 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 156.58 ரூபாய் என இருந்தது. கொச்சி ஏல மையத்தில், 12 லட்சம் கிலோ வந்ததில், 9.36 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 156.78 ரூபாய் என இருந்தது. ஏலத்தில் தொடரும் வீழ்ச்சியால் வர்த்தகர்கள்; விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை