உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ண பூக்கள் விற்பனை ஜோர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ண பூக்கள் விற்பனை ஜோர்

பந்தலுார்; ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பூக்கள் விற்பனை துவங்கியது. அடுத்த மாதம், 5-ம் தேதி, கேரள மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை சிறப்பாக வரவேற்கும் வகையில், கேரளா மாநிலத்தில் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் பூக்கோலம் போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படும். இதற்காக கேரளா, தமிழகத்தின் பல இடங்களில் பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட எல்லையை ஒட்டிய வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் பூக்கள் விற்பனை துவங்கியது. இதற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு, கிலோ, 60 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை செண்டு மல்லி, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !