உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

கூடலூர்: கூடலூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி வரவேற்றார். முதுகலை ஆசிரியர் எபிபென்னெட் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவுக்கு நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கலை மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள் டெய்சி விமலா ராணி, நாகநாதன், லியோ ஆண்ட்ரூஸ், ராஜகோபால் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் உடற்கல்வி ஆசிரியர் சவிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஜூடித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ