கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
பாலக்காடு : அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களை கவுரவித்து, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு பெரிய கடை வீதியில் உள்ள ஆர்.பி., குடம் அரசு நடுநிலை தமிழ் பள்ளியில் மாணவர்களை கவுரவித்தல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது.நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பிரமிளா துவக்கி வைத்தார். தமிழ்நாடு உணவு துறை அமைச்சரின் உதவியாளர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரை, தலைமை ஆசிரியர் ஜோயல் அமலதாஸ், ஆசிரியர்கள் முத்துக்குமார், பிரியா, பள்ளி நலக்குழு உறுப்பினர்கள் முருகானந்தன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சியில், கடந்தாண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி.,) என்ற அமைப்பின் தலைவர் பாஸ்கரன், ஒரு ஆண்டிற்கான தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார்.