அறிவியல் கண்காட்சி
குன்னுார்; அருவங்காடு கே.வி., பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாதிரி வடிவமைப்புகளை உருவாக்கி மாணவ, மாணவியர் அசத்தினர்.அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் செயல்பட்டு வரும் கேந்திரய வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், 2ம் வகுப்பு மாணவ, மாணவியர் சூரிய குடும்பம், கோள்கள் சுழற்சி, சரிவிகித உணவு குறித்த வடிவமைப்பு மாதிரிகளை ஏற்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அனிதா, ரேஷ்மா, ரேணுகா செய்திருந்தனர்.