உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மருத்துவ கல்லுாரிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மருத்துவ கல்லுாரிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டி; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மாணவ-, மாணவிகள் வகுப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நட்சத்திர விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் கவர்னர் மாளிகைக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. மேலும், மின்னஞ்சலில் உள்ள ஒரு சில தகவல்கள் புரியாத வகையில் இருந்ததால் உடனடியாக, நீலகிரி போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட போலீசார் அங்கு வந்தனர். மாணவ-, மாணவிகளை கல்லூரியில் இருந்து வெளியேற்றி கல்லுாரி வளாகம், சமையலறை, மாணவர்கள் தங்கும் விடுதிகள், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில், மின்னஞ்சல் புரளி என்று தெரிந்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை