உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இ--சேவை மையத்தில் சேவை குறைபாடு; பொது மக்கள் புகாருக்கு உரிய பதில் இல்லை

இ--சேவை மையத்தில் சேவை குறைபாடு; பொது மக்கள் புகாருக்கு உரிய பதில் இல்லை

பந்தலுார்; பந்தலுார் தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தில் சேவை குறைபாடு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில் அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலையில், இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை கடந்த ஒரு வாரமாக, கட்டுப்பாட்டு அறையிலிருந்து முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இ-சேவை மையத்தில், சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பேபி என்பவர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார். அப்போது, முறையாக பதில் தெரிவிக்காமல், அலட்சியமாக அங்குள்ள ஊழியர்கள் பேசி உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினார். பொது மக்களுக்கு உடனுக்குடன் சேவை கிடைப்பதாக, மாநில அரசு கூறி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்களின் செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை