பாலியல் துன்புறுத்தல் புகார்; போக்சோவில் இளைஞர் கைது
கூடலுார் ; கூடலுாரில் மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகார் தொடர்பாக 'போக்சோ'வில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.கூடலுாரை சேர்ந்தவர்ரிசாத், 22. இவர், 17 வயது மாணவியுடன்,பழகியுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தார் மாணவியை கண்டித்து,'ரிசாத்திடம் பேச வேண்டாம்,' என, கூறியுள்ளனர். மாணவி, அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரிசாத் மாணவியிடம், 'தன்னிடம் பேச வேண்டும்; இல்லையென்றால், வெளியில் சென்ற போது எடுத்த போட்டோவை வெளியிடுவேன்,' என கூறி மிரட்டியுள்ளார்.இது தொடர்பான புகாரில், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து ரிசாத்தை கைது செய்தார். விசாரணை நடந்து வருகிறது.