மேலும் செய்திகள்
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண போராட்டம்
18-Aug-2025
கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதியில், காட்டு யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் புலி தாக்கி கால்நடைகள் பலியாகி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர், இரவு நேரத்தில் வாகன ரோந்து பணிகள், உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், இப்பகுதி களில் தொடரும் வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் நேற்று, 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதில், 'காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைதடுக்க அகழி அமைக்க வேண்டும்; இப்பகுதிகளில் சேதமடைந்த மாநில, மத்திய சாலைகளை சீரமைக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. பந்தலுார் தாலுகா பகுதிகள் மற்றும் நடுவட்டம், மசினகுடி, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட தனியார் வாகனங்களும் இயக்கவில்லை. கூடலுார் வழியாக ஊட்டிக்கு வந்த வெளி மாநில சுற்றுலாபயணிகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டனர்.
18-Aug-2025