அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர் அகற்றம்
பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனை வளாகம் புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனை ஒட்டி அம்மா உணவகம் செயல்படும் நிலையில், இங்கு வருபவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், எஸ்.ஒய்.எஸ்., ஆறுதல் அமைப்பு, பந்தலுார் யூனிட் சார்பில், புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், நகராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஓரங்களிலும் புதர்கள் வெட்டி சீரமைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் நிர்வாகிகள், டி. உம்மர், அப்துல் அம்சா, யூனுஸ், ரசீத், வாப்புட்டி, உம்மர் உள்ளிட்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.--