உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாணவர்களின் மனநலன் காக்க பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி துவக்கம்

 மாணவர்களின் மனநலன் காக்க பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி துவக்கம்

குன்னுார்: குன்னுார் பள்ளிகளில் 'பீசலு பவுண்டேஷன்' சார்பில், மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி துவங்கப்பட்டது. குன்னுார் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, பீசலு பவுண்டேஷன் சார்பில், சிலம்பம் கலை பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில், பீசலு பவுண்டேஷன் நிர்வாகி ஷாலினி முரளிதரன் தலைமை வகித்து பேசுகையில்,''வளர்ந்து வரும் மாணவர்களின் உடல் நலன் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு சிலம்பம் கலையை ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார். சிலம்பக்கலை பயிற்றுனர்கள் நெடுமாறன், மகேஸ்வரி ஆகியோர், அருவங்காடு டெம்ஸ் மெட்ரிக் பள்ளி, ஜெகதளா, உபதலை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சிகளை துவக்கி வைத்து பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாரா ரமேஷ், மும்தாஜ் ஐரின் ரெஜின் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி