உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் சுற்றுலா பயணிகள் குறைவு

 சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் சுற்றுலா பயணிகள் குறைவு

குன்னுார்: குன்னுார் சிம்ஸ்பூங்காவிற்கு கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், குன்னுார் சிம்ஸ்பூங்காவிற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அதில், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டும், 11,659 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டில், 4,03,043 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனை விட, கடந்த, 2024ல், 4,800,51 சுற்றுலா பயணிகள்; 2023ம் ஆண்டில், 4,38,374 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த ஆண்டில், 77,008 பேர் குறைந்துள்ளனர். இதற்கு, கடந்த ஆண்டில் அதிக நாட்கள் பெய்த கனமழை, இ- பாஸ் நடைமுறை போன்றவை காரணமாக கூறப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை