உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

 பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் பகுதி பழங்குடியின கிராமங்களில், வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களாக உள்ளவர்களின், பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தவறாமல் இடம் பெறவும், வாக்காளர் அல்லாதவர்களின் பெயர்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் மக்கள் மத்தியில் பல்வேறு, குழப்பங்கள் நிலவி வருகிறது. அத்துடன் கடந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, வாக்காளர்களின் உறவு முறையினரின், வாக்காளர் பட்டியல் எண் மற்றும் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்ற தகவலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த விண்ணப்பங்களை பெற்ற பழங்குடியின வாக்காளர்கள், எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தெரியாமல் விண்ணப்பங்களை குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில், பந்தலுார் அருகே கப்பாலா, பழங்குடியினர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகள் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், வி.ஏ.ஓ. ராஜேந்திரன், ஓட்டுச்சாவடி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை