உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ஊட்டி; தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், உள்ள, மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, தச்சு வேலை, எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர் வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக் மற்றும் சித்தாள் உள்ளிட்ட, 11 தொழில் பிரிவுகளின் கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீலகிரியில் மட்டும், 500 கட்டுமான தொழிலாளர்களுக்கு, குன்னுார் மற்றும் கூடலுார் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிலையங்களில், 15ம் தேதி (இன்று) தொடங்கி, வாரதோறும் ஒரு அணிக்கு, 20 பேர் வீதம் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் தொழிலாளிகளுக்கு, சான்றிதழுடன், பயிற்சி நிறைவு நாளில் ஊதியமாக, 5,600 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை