மேலும் செய்திகள்
மரம் வெட்டி கடத்தல்; வனத்துறையினர் வழக்கு பதிவு-
04-Aug-2025
கூடலுார்: கூடலுார் புளியம்பாறை பகுதியில், இரண்டு காட்டு யானைகள் சோலார் மின்வேலியை, லாவகமாக கடந்து, வாழை மரங்களை சேதப்படுத்தி உட்கொண்டு சென்றதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கூடலுார் புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து, வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன. விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில், தினமும் காட்டு யானைகள் இரவில் உலா வருவதுடன், விவசாயம் பயிர்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இரண்டு காட்டு யானைகள், சோலார் மின் வேலியில், வாழை மரத்தை சாய்த்த போது, மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. அதன்பின், யானைகள் கம்பியை கடந்து தோட்டத்தில் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
04-Aug-2025