அரசு பண்ணையில் ராஜநாகம்; பணியாளர்கள் அச்சம்
குன்னுார்:குன்னுார் காட்டேரி அரசு தோட்டக்கலை பண்ணை அருகே வந்த ராஜநாகத்தால் தொழிலாளர் கள் அச்சத்தில் உள்ளனர். குன்னுார் நஞ்சப்பாசத்திரம் அருகே காட்டேரி அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்குள்ள குடோன் பகுதியில் ராஜநாகம் ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த பகுதிகளில் நீண்ட நேரம் ஆய்வு மேற்கொண்டும் ராஜநாகம் சிக்கவில்லை. இதனால் தினமும் தோட்ட பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். பணியாளர்கள் கூறுகையில், 'வனத்துறையினர் இப்பகுதியல் காணப்படும், ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.