உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் பிரச்னைக்கு தீர்வு : தினமலர் செய்தி எதிரொலி

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு : தினமலர் செய்தி எதிரொலி

பந்தலுார்: பந்தலுார் அருகே புது காரைக்கொல்லி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, புதுக்காரைக்கொல்லி பகுதியில் 'டான்டீ' தோட்ட நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுத்து குடியமர்த்தியது. இந்த பகுதிக்கு குடிநீர் வழங்க போதிய திட்டம் செயல்படுத்தாத நிலையில், மாசடைந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழலில் படத்துடன் கடந்த, 16 ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முன்னிலையில், குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ