உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கூடலுார்: கூடலுார், போஸ்பாரா செம்பக்கொல்லி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. சுரேஷ் தலைமை வகித்தார். தேவர்சோலை எஸ்.ஐ., வனகுமார் பழங்குடிகள் உரிமை குறித்து பேசினார்.கூட்டத்தில், 'போஸ்பாரா சங்கிலி கேட் முதல், பேபி நகர் வரையிலான, 3 கி.மீ., சாலையை சீரமைக்க வேண்டும். செம்பக்கொல்லி கிராமத்தின் அருகே, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள அகழியை ஒட்டி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும். முதுமலையில் அமைந்துள்ள பொம்மதேவர் கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும். பழங்குடி மக்கள் தேன் உள்ளிட்ட சிறுவன மகசூல் பொருட்கள் சேகரிக்க அனுமதிக்க வேண்டும்,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை